Sunday, April 21, 2013

மாத்தி யோசி - ஒரு பக்க சிறுகதை



“சார், சொல்ரேன்ன்னு தப்பா நினைக்காதிங்க, உங்க பையன் ரவி க்கு ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வரல, பத்து வயசாகியும் சின்ன ஸ்பெலிங்லாம் கூட தப்பாதான் சொல்றான், ரொம்பா மக்கா இருக்கான்”….ன்னு பள்ளி ஆசிரியர் சொன்னதும் வங்கி அதிகாரியான பரந்தாமனுக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது. இருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், மேற்கொண்டு என்ன செய்யலாம்னு யோசனையில் கிளம்பினார். 
தன் மகன் பற்றிய கவலையில் இருந்து சற்று விடுபட, சாயந்திரம் குடும்பத்தோடு ஷாப்பிங் கிளம்பினார் பரந்தாமன். மனைவி சமையலுக்கான பொருள்களையும், ரவி தான் விளையாடுவதற்கு உண்டான பொருள்களையும் ட்ராளி முழுவதும் நிரப்பி கொண்டு பில்லிங் கவுன்டருக்கு வந்தனர். ரவி ஒவ்வொரு பொருளாக பார்த்து எடுத்துக் கொடுக்க, கம்ப்யுட்டர் ஆப்பரெட்டர் வேகமாக பில்லிங் போட்டு கொண்டிருந்தார். “சார், 2,450 ரூபாய் பில், காஷா அல்லது கார்டா” ன்னு ஆப்பரேட்டர் கேட்டவுடன் தன் பர்சை எடுத்தார். 
“அப்பா, இவர் தப்பா பில் போட்டிருக்கார், 150 ரூபாய் அதிகமாக பில்லில் இருக்கு” ன்னு ரவி அலறினான். “இல்லடா, கம்ப்யுட்டர் பில் கரெக்டாதான் இருக்கும்”ன்னு அவனை சமாதானபடுத்திகையிலும், “இல்லப்பா, நான் ஒவ்வொரு பொருளாக அவருக்கு கொடுக்கும் போது கூட்டிக்கொண்டே வந்தேன், நான் தான் கரெக்ட்” ன்னு பிடிவாதமாக இருந்தான். கண்டிப்பாக மகன் கூட்டும்போது தப்பு பண்ணியிருப்பான்னு தெரிந்தும், அவனை விட்டுக்கொடுக்காமல் மறுபடியும் எல்லா பொருளையும் பில்லிங் போடுமாறு வற்புறுத்தினார். இந்த தடவை பரந்தாமனே உன்னிப்பாக பில்லிங்கை கவனித்தார். “சாரி சார், ஒரு ஐட்டம் டபுள் பில்லிங் ஆயிடுச்சு, 2,300 ரூபாய் கொடுங்க சார்” ன்னு ஆப்பரேட்டர் சொன்னதும், பரந்தாமனுக்கு பொறி தட்டியது, முகமும் மலர்ந்தது.
5 வருடம் கழித்து…
“நம் பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட ரவி, சிங்கப்பூரில் நடந்த கணித ஒலிம்பியாட் போட்டியில் உலக அளவில் முதலாவதாக வந்தமைக்காக அவரை பள்ளி நிர்வாகம் பெருமையுடன் கௌரவிக்கிறது. அவர் தந்தை பரந்தாமனை மேடையில் பேச வருமாறு அழைக்கிறோம்”.
பரந்தாமன் ஆனந்த கண்ணீரோடு பேச ஆரம்பித்தார், “ஒரு சராசரி தந்தையாக நான் இருந்திருந்தால், ஆங்கிலத்தில் மக்கா இருக்கானே ன்னு ரவி யை ஆங்கில பயிற்சிக்கு  அனுப்பியிருப்பேன். பிடிக்காத ஆங்கிலத்தை அவனும் மிகவும் கஷடப்பட்டு படிச்சு, ஒரு சுமார் நிலையைதான் எட்டியிருப்பான். ஆனால் எனக்கு என் மகனை ஒரு மக்காக எண்ண ஒரு போதும் மனது ஒப்புக்கொள்ளவில்லை. அவனிடம் கண்டிப்பாக திறமை இருக்குன்னு நம்பினேன். அப்போதுதான் அவனுக்கு கணிதம் மிக லாவகமாக வருவதை கண்டுபிடித்தேன். ஆங்கிலத்திற்கு பதிலாக அவனுக்கு கணிதத்தில் பயிற்சி கொடுத்தேன். இன்று உலக அளவில் முதலாவனதாக வந்திருக்கிறான். எதில் திறமை இருக்கிறதோ அதில் கவனம் செய்யுங்கள், கண்டிப்பாக முதலாவதாக வருவீர்கள், என் மகனே உதாரணம்” ன்னு பேச்சை முடிக்க கரவோஷம் அடங்க வெகு நேரமானது.

Sunday, December 20, 2009

தொல்லை - ஒரு நிமிட சிறுகதை

அலுவலகம் முடிந்து சாயங்காலம் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து அல்சுரிலிருக்கும் வீட்டிற்க்கு வருவதற்குள், த.நா வில் என் சொந்த ஊருக்கு போய் வந்துவிடலாம். எறும்பை விட கொஞ்சம் வேகமாக வாகன நெரிசலில் ஊர்ந்து வருவதற்க்குள் 2.5 மணிநேரம் ஆகிவிடும். களைப்பாக வீடு வந்து கதவை திறக்கும் போதே, வீட்டினுள் பசங்க கச்சேரி உச்சஸ்தாயில் இருந்தது. மனைவி இரண்டு மகன்களையும் டாம் & ஜெரி போல் விரட்டி விரட்டி அடித்து கொண்டிருந்தாள்.

“என்னால முடியலைங்க! பிராணணை போகுது, இவங்க பண்ற தொல்லை தாங்கமுடியல சாமி, நீங்க ஜாலியா காலையில ஆபிஸ் போய் நைட் வர்றிங்க, உங்களுக்கு எங்கே தெரியப்போது நான் அனுபவிக்கிற கொடுமை”

”பெரியவன் வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடி ஷோகேஸ் கண்ணாடி உடைச்சு வீடெல்லாம் தூம் பண்ணிட்டான். சின்னவன் வாஷ் பேசின் குழாயை திறந்து, வீடு முழுவதும் ஸ்விமிங்பூல் மாதிரி நீரை கொட்டி துவம்சம் பண்றான். நான் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி முடிவதற்குள், ரெண்டு பேரும் கட்டி புரண்டு சண்டை போட்டு பெட்ரூமையே ஒரு வழி பண்ணிட்டாங்க. என்னால சத்தியமாய் முடியலைங்க”ன்னு சொல்லும்போதே அவள் நிலை பரிதாபமாக இருந்தது.

”இதோ பாருடி, இன்னும் சில வருடங்கதான் இவங்க கவலையில்லாம விளையாடறதுல்லாம், அதன் பிறகு மேற்படிப்புக்காக வெளியுருக்கு சென்று நம்மளைவிட்டு ஹாஸ்டல்லில் தங்கி படிக்க போய்விடுவாங்க. அப்புறம், வேலைக்காக வெளிநாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ கண்ணுக்கெட்டாத தூரத்திற்க்கு சென்றுவிடுவார்கள். ஏதோ திபாவளி, பொங்கல் என்று பண்டிகையின்போது நம்மை பார்க்க வருவார்கள், கண் மூடி திறப்பதுற்குள் டாடா பைபை சொல்லி போய்யினே இருப்பார்கள். நாம் மட்டும் தன்னந்தனியாக உனக்கு நான் எனக்கு நீ ன்னு எப்படா அடுத்த தீபாவளி வரும்ன்னு காத்துகொண்டிருக்க வேண்டியதுதான். அப்போழுது நாம் அனுபவிக்கும் வலிக்கு இவர்கள் இப்போழுது பண்ணும் குறும்புகள்தான் மருந்துகளாய், சுகமான சுமைகளாய் நமக்கு அசைபோட்டு காலம் தள்ள சுவடுகளாய் இருக்கும்னு சொல்லி கொண்டிருக்கும் போதே என் நெஞ்சினில் தலையை சாய்த்தாள். சட்டை நனைந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவள் மனமும்.







Friday, September 11, 2009

திருட்டு இலாபத்தில் பங்கு கொடுக்கும் பேருந்து

இரண்டு சக்கர வாகனத்தை சர்விஸ்ஸுக்கு விட்டிருந்ததால், 5 km தள்ளி உள்ள அலுவலகத்திற்கு பேருந்தில் செல்ல அருகில் உள்ள பேருந்து நிருத்ததிற்கு விரைந்தேன். நிறுத்தம் அருகில் வந்தபோது, வழக்கம்போல் அப்போதுதான், நான் போக வேண்டிய பேருந்து கிளம்பி சென்றது. ச்சே! ஏன்தான் நமக்கு மட்டும் இப்படி.., 10 விநாடி முன் வந்திருந்தால் பிடித்திருக்கலாம், எல்லாம் என் ராசி என்று சலித்துக்கொண்டு அடுத்த பேருந்துக்காக் காக்க வேண்டியதாயிற்று. ஒரு வேளை, கிளம்பும் போது கீழ் வீட்டு குழந்தையை கொஞ்சாமல் வந்திருந்தால் பிடித்திருக்கலாமோ அல்லது ஒன்றுக்கு நான்கு முறை கதவு தாழிடபட்டிருக்கிறதா என்று செக் செய்யாமல் வந்திருந்தால் பிடித்திருக்கலாமோ என்று என்னென்னமோ மனம் புலம்பியது.

ஒரு வழியாக புஷ்பக் வகை பேருந்து வந்தது. இந்த வகையான பேருந்தில் நடத்துனர் கிடையாது, ஒட்டுநர் மட்டும்தான், அதனால ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கும். ஒரே வழியில் எல்லோரும் இறங்கி ஏறிய பின்னர், வண்டி புறப்பட்டது. ஓட்டுநரே டிக்கட் கொடுத்து வண்டியையும் ஓட்டுவதால் காலம் விரயமாகும். ரொம்ப தூரம் செல்லும்போது, இந்த வண்டியை தவிர்ப்பது உத்தமம். ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடிச்சிக்கிட்டு, அசால்ட்டாக சாலையே பார்க்காமல், இன்னோரு கையில் சில்லரை கொடுத்து ஓட்டும் போது, எனக்கு முதல் முறை ப்ளைட்ல போவது போல் பயமாக இருந்தது. ஒரு காலத்திலே கூட்டம் இல்லாத ரூட்டில் அறிமுகப்படுத்த இவ்வகையான பேருந்து, இன்னிக்கு கூட்டம் நெரிசலாக மாறினாலும், இதையே போக்குவரத்து நிறுவனம் பின்பற்றுவது வேடிக்கையாக இருக்கிறது.

என் ஸ்டாப்பிங் சொல்லி 7ரூ டிக்கெட்க்கு 10ரூ கொடுத்தேன். ஆனால் டிக்கெட்க்கு பதிலாக டிரைவர் 5ரூ மீதி கொடுத்து, அடுத்த நபரிடம் காசு வாங்க, நான் கூட்ட நெரிசலில் உள்ளே தள்ளப்பட்டேன். 5ரூ அவருக்கு, 2ரூ நமக்கு லாபம். அடடா, இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு பிறகு லாபத்தில் பங்கு கொடுப்பது பெங்களுர் பேருந்து மட்டுமே இருக்க முடியும். இறங்க வேண்டிய நிறுத்தம் மிக அருகில் இருந்தால் இந்த ரிஸ்க்கை பெரும்பாலும் அவர்கள் எடுக்க தயங்குவதில்லை. இருந்தாலும் எனக்கு மனசு படபடத்தது, யாராவது செக்கிங் வந்துவிட்டால் ஆப்புதான்.

ஒரு வழியாக என் ஸ்டாப்பிங் வந்ததும், பள்ளியை விட்டு குழந்தைகள் மாலையில் வீட்டை நோக்கி வேகமாக வருவதுபோல, பேருந்திலிருந்து விடுப்பட்டேன். சட்டை பாக்கெட்டில் கணத்த 2ரூ வை எடுத்து, பஸ் ஸ்டாப்பிங்கில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ஏழை சிறுவனுக்கு கொடுத்ததும் மனசு லேசானது. அரசாங்கமும் இதைத்தான் செய்திருக்கும் என்று என்னையே சமாதானப்படுத்திக்கொண்டேன்.




Wednesday, September 09, 2009

Crossing the Rubicon

When I saw the 1 hr training course “Crossing the Rubicon” in training calendar, I unconsciously subscribed to that because of curiosity in knowing about “Rubicon”.

This idiom “Crossing the Rubicon” is linked with Caesar’s true incident. In 49BC, Rubicon is a river in northern Italy and it is one of the boundaries of Rome empire. To prevent internal coup, Rome’s law stated that any internal army crossing the Rubican would be killed ruthlessly by wage of war. Caesar, a successful Roman general planned to attack Rome with large battalion of army via Rubicon. Once they are about to cross the river, Caesar had second thought on the bank of the river to cross or not. He was thinking and thinking for a long time, 6 months passed, he still was not able to make the decision and all his army were lying idle on bank of Rubicon.

“What kind of behavior did Caesar exhibited on the bank of rubicon?” trainer asked the audience. It is Procrastination. But why? It is due to Fear of Failure. We can witness these kind of procrastination within everybody on day-today activities. Some of them like, to switch the career from Finance to software, Resign the existing job and start business, switch from technical role to management role, whether to go abroad or not etc. In these situations, most people tend to take more time to make the critical decision which will have significant impact in their lives. This idiom, “Crossing the Rubicon” denotes those situations.

Top psychologist says, most people never crosses the Rubicon (means doesn't take decision) in their real life after the prolonged procrastination and they repent for not crossing Rubicon (means droping their ambitions) decision in later part of their life. So he recommends to cross the Rubicon after thorough thought to reap the benefits.

Let’s come to Caesar again, whether he crossed or not? One of his minister advised him, “if you go back without crossing the Rubicon, it will haunt you till you go to grave and also damages your reputation of bravery. If you delay it further, our men will go sick”. Soon, Caesar decided to cross the Rubicon, and rest is history. He became the successful emperor of Rome.

Hereafter you come across this idiom "Crossing the Rubicon" or "...in the bank of Rubicon" in newspaper or TV news, you will certainly understand the context. For e.g. US on the bank of Rubicon on attacking N.Korea

Wednesday, August 19, 2009

மதிய உணவு அடிதடி

2500 பேர் பணிபுரியும் என்னுடைய அலுவலகத்தில் மதியம் லஞ்ச் எப்போதும் த்ரில்லங்கா இருக்கும். லேட்டா போனால் நீண்ட கியூ'ல் நிற்க வேண்டும். கியூ'ல் நிற்பதும் மற்றவர்களுக்காக காத்திருப்பதும, ஏனோ எனக்கு சுத்தமா பிடிப்பதில்லை. நேரத்தை சாகடிப்பதுபோல் உணர்வேன். அதுவும் எனக்கு முன்னால் இருக்கும் நபர் மெதுவா ஆடி அசைந்து slow-motion'ல் வழி மறைத்து சென்றால் கோபம் பொத்துக்கொண்டு வரும். Either go fast or let people go. This is 100% applicable to bangalore traffic டூ.

அடுத்து உணவு பண்டங்களை தட்டில் போட்டு கடைசியாக ஸ்பூன் ஸ்டாண்டிற்கு வந்தால் அது காலியாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவர்களுடைய ஸ்பூனை கழுவி மீண்டும் refill பண்ணுவார்கள். நேற்று சேர்ந்த fresher முதல் CEO வரை கைகளில் தட்டை ஏந்தி ஸ்பூன் வருகைக்காக கூட்டமாக காத்திருப்பார்கள். சில சமயம் 20 பேர் காத்திருக்க, 5 ஸ்பூன் மட்டுமே ரீபில்லுகாக வரும்போது அதை எடுக்க பெரிய யுத்தமே நடக்கும். ஒரு சிலர் அதை வாஷ் பண்ணும் இடத்திற்கே சென்று ஸ்பூன் வாங்கி வெற்றியுடன் திரும்புவர். அதை பார்க்கும்போது காமெடியாகவும், மன வேதனையாகவும் இருக்கும். கொஞ்சம் நேரம் காத்திருந்து, சரி கையாலயே சாபிடலாம்னு சிலர் களத்திலிருந்து வெளியே வருவர். பொதுவாக தமிழர்கள் கையால் சாப்பிட தயங்குவதில்லைனுஅங்கு பார்க்கும் போது தெரியும்.

ஒருமுறை winston சர்ச்சில்ளோட விருந்தில், எல்லாரும் ஸ்பூனில் சாப்பிட, ராதா கிருஷ்ணன் மட்டும் கையில் சாப்பிடுவதை பார்த்து, அது hyegenic இல்லைன்னு சர்ச்சில் அறிவுரை சொன்னாரம். ஆனா நம்ம ஆள் விடுவாரா, என்னோட கைய நான் மட்டும்தான் உபயோக படுத்த முடியும், அதனால் இதுதான் hyegenic னு பதிலடி கொடுத்தாராம்.

IT தொழிலாளர்களை இப்படிகேவல படுத்த கூடாதுன்னு ஆவேசமாக அட்மின்க்கு (Admin) மெயில் அனுப்பினேன். அவர்கள் மேலேயும் குற்றம் சொல்ல முடியாது. இதுவரை 10,000 ஸ்புனாவது வாங்கி போட்டிருப்பார்கள், ஆனால் அவை மிக விரைவில் காணமால் போய்விடுகிறது. சாப்பிட்ட மீதியை ஸ்பூனோடு சேர்த்து குப்பை தொட்டியில் போடுகிறார்கள் அல்லது வீட்டிலிருந்து உணவு எடுத்து வருகிறவர்கள் தெரியாமல் ஸ்பூணை வீட்டுக்கு எடுத்து செல்கின்றார்களா தெரியல. ஒரு சின்ன ஸ்பூனுக்காக ஒரு செக்யூரிட்டி வச்சி செக் பண்ணவும் முடியாது. ஏற்கனவே, குளோபல் வார்மிங்க்ன்னு சொல்லி, disposable tumblers'I தூக்கி எறிந்து, எல்லார்க்கும் கம்பெனி mug கொடுத்தார்கள். அதுபோல், எல்லார்க்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தாலும் ஆச்சர்யம் படுவதற்கில்லை. இதற்கு இன்னும் விடிவு பிறக்கலை. உங்களிடம் எதாவது ஐடியா இருக்கா?