Wednesday, August 19, 2009

மதிய உணவு அடிதடி

2500 பேர் பணிபுரியும் என்னுடைய அலுவலகத்தில் மதியம் லஞ்ச் எப்போதும் த்ரில்லங்கா இருக்கும். லேட்டா போனால் நீண்ட கியூ'ல் நிற்க வேண்டும். கியூ'ல் நிற்பதும் மற்றவர்களுக்காக காத்திருப்பதும, ஏனோ எனக்கு சுத்தமா பிடிப்பதில்லை. நேரத்தை சாகடிப்பதுபோல் உணர்வேன். அதுவும் எனக்கு முன்னால் இருக்கும் நபர் மெதுவா ஆடி அசைந்து slow-motion'ல் வழி மறைத்து சென்றால் கோபம் பொத்துக்கொண்டு வரும். Either go fast or let people go. This is 100% applicable to bangalore traffic டூ.

அடுத்து உணவு பண்டங்களை தட்டில் போட்டு கடைசியாக ஸ்பூன் ஸ்டாண்டிற்கு வந்தால் அது காலியாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவர்களுடைய ஸ்பூனை கழுவி மீண்டும் refill பண்ணுவார்கள். நேற்று சேர்ந்த fresher முதல் CEO வரை கைகளில் தட்டை ஏந்தி ஸ்பூன் வருகைக்காக கூட்டமாக காத்திருப்பார்கள். சில சமயம் 20 பேர் காத்திருக்க, 5 ஸ்பூன் மட்டுமே ரீபில்லுகாக வரும்போது அதை எடுக்க பெரிய யுத்தமே நடக்கும். ஒரு சிலர் அதை வாஷ் பண்ணும் இடத்திற்கே சென்று ஸ்பூன் வாங்கி வெற்றியுடன் திரும்புவர். அதை பார்க்கும்போது காமெடியாகவும், மன வேதனையாகவும் இருக்கும். கொஞ்சம் நேரம் காத்திருந்து, சரி கையாலயே சாபிடலாம்னு சிலர் களத்திலிருந்து வெளியே வருவர். பொதுவாக தமிழர்கள் கையால் சாப்பிட தயங்குவதில்லைனுஅங்கு பார்க்கும் போது தெரியும்.

ஒருமுறை winston சர்ச்சில்ளோட விருந்தில், எல்லாரும் ஸ்பூனில் சாப்பிட, ராதா கிருஷ்ணன் மட்டும் கையில் சாப்பிடுவதை பார்த்து, அது hyegenic இல்லைன்னு சர்ச்சில் அறிவுரை சொன்னாரம். ஆனா நம்ம ஆள் விடுவாரா, என்னோட கைய நான் மட்டும்தான் உபயோக படுத்த முடியும், அதனால் இதுதான் hyegenic னு பதிலடி கொடுத்தாராம்.

IT தொழிலாளர்களை இப்படிகேவல படுத்த கூடாதுன்னு ஆவேசமாக அட்மின்க்கு (Admin) மெயில் அனுப்பினேன். அவர்கள் மேலேயும் குற்றம் சொல்ல முடியாது. இதுவரை 10,000 ஸ்புனாவது வாங்கி போட்டிருப்பார்கள், ஆனால் அவை மிக விரைவில் காணமால் போய்விடுகிறது. சாப்பிட்ட மீதியை ஸ்பூனோடு சேர்த்து குப்பை தொட்டியில் போடுகிறார்கள் அல்லது வீட்டிலிருந்து உணவு எடுத்து வருகிறவர்கள் தெரியாமல் ஸ்பூணை வீட்டுக்கு எடுத்து செல்கின்றார்களா தெரியல. ஒரு சின்ன ஸ்பூனுக்காக ஒரு செக்யூரிட்டி வச்சி செக் பண்ணவும் முடியாது. ஏற்கனவே, குளோபல் வார்மிங்க்ன்னு சொல்லி, disposable tumblers'I தூக்கி எறிந்து, எல்லார்க்கும் கம்பெனி mug கொடுத்தார்கள். அதுபோல், எல்லார்க்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தாலும் ஆச்சர்யம் படுவதற்கில்லை. இதற்கு இன்னும் விடிவு பிறக்கலை. உங்களிடம் எதாவது ஐடியா இருக்கா?

10 comments:

Bangy said...

test 1..2..3

Swami said...

blog வருகைக்கு congratulations. உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. மேலும் நல்ல தொகுப்பை தொடர்ந்து தருமாறு சொல்லிக்கிறேன்

புருனோ Bruno said...

கைவைத்து சாப்பிடுவது தான் எனக்கு தெரிந்து நல்ல தீர்வாக தெரிகிறது

Saravana said...

படிக்கும் போது காமெடியாக இருந்தது. எல்லொர்க்கும் ஒரு ஸ்பூன் கொடுப்பது சிறந்த்தது. Making everybody responsible for the spoon :-)

Raghu said...

Good writing and congratulations for ur first blog. Title looks like telugu film title :-)

Anonymous said...

நல்ல பதிவு. நன்றி நண்பரே!

இந்த க்யூ களேபரத்துக்காகவே நான் cafeteria உணவைத் தவிர்த்துவிடுவேன், அதற்கு வெளியே கையேந்தி பவனில் நின்று சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.

ஒருமுறை, என் மனைவியுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உணவகத்துக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன், அங்கே பஃபேவுக்கு நின்ற க்யூவைப் பார்த்துவிட்டு அவர் சொன்ன கமென்ட், ‘இதென்ன ஜெயில்மாதிரி மணியடிச்சா சோறா? காசு கொடுத்துதானே சாப்பிடறோம்?’ :))))))

- என். சொக்கன்,
குர்காவ்ன்.

Vijayashankar said...

Ask them to return the spoon and collect the small deposit back, like in USA what is done for Soda cans, bottles.

RaviSuga said...

Thanks to Swamy, Saravana, Bruno, Raghu, chokkan, Vijayashankar for your valuable comments
//‘இதென்ன ஜெயில்மாதிரி மணியடிச்சா சோறா? காசு கொடுத்துதானே சாப்பிடறோம்?’ // நல்ல timing sense
/கைவைத்து சாப்பிடுவது தான் எனக்கு தெரிந்து நல்ல தீர்வாக தெரிகிறது// பொதுவாக வட இந்தியர்கள் கையில் சாப்பிட தயங்குவார்கள்
//Ask them to return the spoon and collect the small deposit back, like in USA what is done for Soda cans, bottles.//
Good idea, but they've to trust the employees

Swami said...

பேசாமல் அனைவரைம்யும் கையால் சாப்பிட சொல்லுங்கள் :)

Vijayashankar said...

//Good idea, but they've to trust the employees//

Trust is a 2 way street, you give and take!

Post a Comment

இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துகளை தெரிவித்தால் அடுத்த தடவை இதை விட சுமாரான பதிவு பதிக்கப்படும் :-)